பெருந்தோட்டங்களிலேயே விசேட தேவையுடைய சிறுவர்கள் அதிகம்

253 0

இலங்கையில் 5 தொடக்கம் 17 வயது சிறுவர்களிடையே சுமார் 78,345 சிறுவர்கள் விசேட தேவையுடையவர்களாக இருப்பதாக சிறுவர் நடவடிக்கை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 45 லட்சத்து 71 ஆயிரத்து 442 சிறார்கள் இருப்பதாகவும் அதில் 23 லட்சத்து 7 ஆயிரத்து 805 சிறுவர்களும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 637 சிறுமிகளும் இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பெருமளவான விசேட தேவையுடைய குழந்தைகள் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே காணப்படுவதாகவும், நகர்புறங்களில் 1.6 வீதமானவர்களே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.