சமிச்ஞைகளை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மீரிகம – பல்லெவெல வீதியின் கஸ்பே பிரதேசத்திலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டிக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத காரணத்தினாலேயே சமிச்ஞைகளை மீறி சென்றமை தெரியவந்துள்ளது.

