வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

348 0

மோட்டார் சைக்கிள் முகமூடி தலைக்கவசம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெருப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் சில வதந்திகள் சிக்கலானவை என முன்வைத்த முறைப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அச்சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை இன்னும் ஒரு மாதத்துக்குள் மறுசீரமைத்து மீண்டும் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிசிர கோதாகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.