ரணில் நாளை ஜப்பான் பயணம்

322 0

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்திற்கு பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம , விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் இந்த விஜயத்தின் போது இலங்கையுடனான நட்புறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயவுள்ளனர். மேலும் இந்த விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.