நிட்டம்புவயில் லொறி-முச்சக்கரவண்டி விபத்து, 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

323 0

கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள நிட்டம்புவ, கோன்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றுமொரு பெண் அருகிலுள்ள வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.