காலி – மாகால்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண்ணொருவரை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை ஆயுதங்களுடன் 4 பேர், மோட்டார் வாகனத்தில் கொள்ளையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளையர்களை தேடி தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

