மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தொற்று

344 0
டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 94 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் எம்.எஸ்.ப்றாலெப்பை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஆயிரத்து 740 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார, மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்குச் சென்று, டெங்கு நோய் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுக்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரத்து 486 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.