இன்புளுவன்சா தொற்று தொடர்பில் அவதானம்

478 0
இன்புளுவன்சா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

சன நெரிசல் காணப்படுகின்ற இடங்களில் இது இலகுவாக தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பண்டிகை காலப்பகுதியில், பொருட்களை கொள்வனவு செய்யும் போதும், தமது சொந்த ஊர்களுக்கு பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு சுகாதார அமைச்சின் நோயியல் பிரிவின் ஆலோசகர் சமித் கினிகேயின தெரிவித்துள்ளார்.