வடக்கில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரியோருக்கு உதவி திட்டம் வழங்கிவைப்பு

310 0
வடமாகாணத்தில் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கோரியவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாண பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண  முதலமைச்சர் நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து மருத்துவ உதவிக்கான கோரிக்கை விடுத்த பொது மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 111 பேருக்கு சுமார் 35 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.