உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் மரணம்;சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

315 0

தமன – வானேகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பள்ளிவாசலில் உணவு செயற்பாட்டை முன்னெடுத்து சென்றுள்ள நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றைய தினம் அம்பாறை நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.