
ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத் தில் நடைபெற்றுள்ளது.
தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

