2016 ம் ஆண்டில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில்46 சம்பவங்கள்

355 0
வவுனியா மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமாக 46 சம்பவங்களும் சிறுவர் பாலியல் முயற்சியாக 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வட மாகாண சிறுவர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தினில் சிறுவர்கள் மீதான வன்முறைகள் கடந்த ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. இதில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் 46ம் , சிறுவர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி 12ம் இடல்பெற்றுள்ளது. இதேபோன்று உடல் ரீதியான துஸ்பிரயோகம் 17ம் , உள ரீதியான துஸ்பிரயோகமாக 2 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதேபோன்று சிறுவர் தற்கொலை 5 சம்பவங்களும் , கவனிப்பு அற்ற சிறுவர்களாக 52 பேரும் உள்ளனர்.
இதேபோன்று வவுனியா மாவட்டத்தினில் 2016ம் ஆண்டில் இடை விலகிய பாடசாலை மாணவர்களாக 36பேரும் , பிள்ளைப் பருவத் திருமணங்கள் 8ம் பதிவாகியுள்ளன. இதே நேரம் புதிதாக இல்லங்களில் சிறுவர்களை இணைத்துக்கொள்ளுமாறு 215 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இதில் 87 சிறுவர்கள் இல்லங்களில் இணைத்துள்ளனர். இதேநேரம் மாவட்டத்தினில் 145 சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதாகவும் சுட்டிக் காட்டப்படுவதோடு பல்வேறு வகையான 493 வழக்குகள் சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.