மாணவர்கள் மத்தியில் ஒருவித வைரஸ் நோய் பரவியதன் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருட பண்டிகையின் பின்னர் மீண்டும் திறப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி மாணவர்கள் மத்தியில் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவியதால் சுமார் 1000 க்கும் அதிக மான மாணவர்கள் பல்கலைக்கழக மத் திய வைத்திய நிலையத்திலும், பேரா தனை போதனா வைத்தியசாலையி லும் சிகிச்சைப் பெற்று வெளியேறினர்.
இதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் மூன்றாம் திகதி நண்பகலுடன் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியதுடன், 04 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டதுடன் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு முன்னர் மாணவர்கள் தங்கள் விடுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மூடப்பட்ட பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரும் தமிழ் – சிங்கள பண்டி கையின் பின்னர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து மாணவர்களுக்கு பின்னர் அறி விக்கப்படும் எனவும் உபவேந்தர் கலாநிதி உபுல் திஸாநாயக்க தெரிவித்துள் ளார்.

