மக்கள் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்!

370 0

நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக அதனை பயன்படுத்த வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊருபொக்க, கின்னெலிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முதிர்ச்சியான அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்படுவார்களேயானால், நாடாளுமன்றத்தில் தற்போது காணப்படும் பிரச்சினை இருக்காது.

இதனால், மக்கள் சிறந்த, சேவை மனப்பான்மை கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.