டெல்லியில் ஜெர்மனி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்

343 0
தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடக்கும் போது ஸ்கோல்ட்டை கத்தியால் குத்திவிட்டு அவர் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு ரிக்‌ஷா ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
காயமடைந்த ஸ்கோல்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய ரிக்‌ஷா ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஜெர்மனி வாலிபர் மீது தலைநகர் டெல்லியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து டெல்லி அரசிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை கேட்டுள்ளார். மேலும், சிகிச்சை பெறும் ஜெர்மனி வாலிபருக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.