பாகிஸ்தான், 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்ட் ஷகீல் ஹுஸைன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று இந்த அரிசியைக் கையளித்துள்ளார்.
இலங்கையில்இ வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக இந்த அரிசியை நன்கொடையாக வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

