திருகோணமலை துறைகத்தில் உள்ள ஒருதொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.2003 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10 எண்ணெய் தாங்கிகளை இலங்கையின் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டு, ஒரு தொகுதி எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்திய நிறுவனம் பயன்படுத்தும் சில எண்ணெத் தாங்கிகளை அவற்றுக்கே குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

