கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்ததாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன ஆகியோருடன், தாமும் ஜனாதிபதியை சந்தித்ததாக விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், நாடடில் இடம்பெறும் ஏனைய நில விடயங்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியதாக விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

