வருகின்ற புத்தாண்டு சமயத்தில் அதிவேக வீதிகளில் விஷேட போக்குவரத்து முறையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.
அதிவேக வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் நுழைவு மற்றும் வௌியேறும் வாயில்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் மூலம் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உதவுமாறு அந்தப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க கூறினார்.
இது தவிர பண்டிகை காலத்தில் பொது மக்களின் நலன் கருதி மேலதிகமாக பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கூறியுள்ளார்.

