அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

290 0

அநுராதபுரம் விஹாரகலன்சிய பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவர் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த தாயின் சடலமும், வீட்டின் கிணற்றில் இருந்து இரண்டு பிள்ளைகளின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கடற்படை வீரர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக இரு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
ஒன்றரை மற்றும் நான்கு வயதுடைய இரு சிறுமிகளே உயிரிழந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.