உள்ளுராட்சி தேர்தல் முறைமை திருத்தச் சட்ட மூலம் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
புதிய திருத்தத்தின்படி சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பெண்களுக்காக 25 – 30 சதவீத ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
அதேநேரம் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படாதுள்ளது.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் 133 உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள் மீளாய்வு செய்யப்படாதுள்ளதாக கூறப்படுகிறது.

