விஸ்வமடு பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் கைதான வர்த்தகர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டார்.
அவர் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
குறித்த வர்த்தகர், இன்னொருவரிடம் இருந்து வட்டிக்கு பணம் பெற்று திருப்பி செலுத்தாமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

