ரஷ்யாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்கவின் வெளிநாட்டு கணக்குகளுக்கு பாரிய அளவு நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் இதனை கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினர்.
மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம் இந்த விமான கொள்வனவுக்கான ஒப்பந்தம், விமானப்படை தலைமையகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு பொறுப்பாக இருந்த ஓய்வுப்பெற்ற அதிகாரிக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

