தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கை அகதிகள், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்தின் பணிப்பாளர் டெயிஜி டெல் சந்தித்த போது கலந்துரையாடப்பட்டது.
நாடு திரும்புகின்ற அகதிகளுக்கு உதவியளிப்பது குறித்து ஆலோசிப்பதாக, இதன்போது அகதிகள் ஆணையக பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்னேஸ்வரனினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

