கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடல்

242 0

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2017-பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பதிவாளர் இதனை அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை, கல்லடி, திருகோணமலை வளாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுள் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவிருந்தன.

8ம் திகதி நடைபெறவிருந்த இந்த நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

இதற்கான மறுதிகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.