மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல தயார் – சீனா

297 0

சீன இலங்கை உறவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி எடுத்து செல்ல தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீன ஆலோசனை சபையின் தேசிய குழு தலைவர் யூ சென்ஷன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் சிறந்த நட்பு நாடு மாத்திரமின்றி நல் உறவுகளை பேணும் நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சிறந்த வகையில் முன்னெடுத்து செல்ல பொறுப்புடன் செயலாற்றுவதாக சீன ஆலோசனை சபையின் தேசிய குழு தலைவர் யூ சென்ஷன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.