இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பாரிய பாதுகாப்பு ஒப்பந்தம்

267 0

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலாக பாரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

200 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்திற்கு அமைய இந்தியாவினால் உயர் தன்மையை கொண்ட நிலத்தில் இருந்து வான் வெளிக்கு ஏவும் ஏவுகணை மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த பரிவர்தனைகளை மேற்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, பாரிய இறக்குமதி செலவீனங்களை தவிர்க்கும் நோக்கில் இந்தியாவிலேயே நவீன் பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நிய செலவாணியினை பெருமளவில் இந்தியா சேமிக்க முடியும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் கடந்த ஆண்டில் 650 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

இதில், அதிக அளவிலான பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவிற்கு, ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.