ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் , ஒவ்வொருவரும் தலா பத்தாயிரம் ரூபா ரொக்க பிணை அடிப்படையிலும் , மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணை அடிப்படையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

