திருகோணமலை வன இலாக்கா அதிகாரியை தாக்கிய மூன்று பேர் கைது!

319 0

திருகோணமலை – மொறவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மொறவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்து இலாக்கா அதிகாரியொருவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போதே அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.