சீனாவின் கமியூனிச கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யூ சென்செங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சீன வானூர்தி சேவைக்கு சொந்தமான விசேட வானூர்தி மூலம் நேற்று இரவு அவர் கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு தரப்பினருடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்களின் போது, இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள அபிவிருத்தி முதலீடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்தவுடன் அவர் பாகிஸ்தான் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

