சிரியாவில் 33 இளைஞர்களை படுகொலை – ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு

327 0

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் சிரியாவில் 33 இளைஞர்களை படுகொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரிய ஈராக் எல்லையில் உள்ள தெயீர் அல்-ஸர் மாகாணத்திலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள் சுமார் 18 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக கிடைக்கபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.