இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

335 0

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குமாறும், கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் உரிமையை உறுதிசெய்யுமாறும் இந்தியா தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த விடயம் தொடர்பிலும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், கச்சத்தீவு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக மீனவாகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.