இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் – ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

226 0

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் விவசாயத்துறை நவீனமயமாக்களுக்காக 42 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது.

இதற்கான உடன்படிக்கையானது, நிதி அமைச்சின் செயலாளர் ஆர். எச். எஸ். சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரதிநிதி தங் லாய் மார்க் ஆகியோருக்கு இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு 12 மில்லியன் யூரோக்களும், விவசாயத்துறை நவீனமயமாக்கலுக்கு 30 மில்லியன் யூரோக்களும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.