நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

234 0

நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் வருமான கலால் திணைக்களம், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் முதலானவற்றை கண்காணிக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.