முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் தொடர்பில் சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் தீர்வு

351 0

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அனைத்து இலங்கை உந்துருளி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அனைத்து இலங்கை உந்துருளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தரம், பாதுகாப்பு மற்றும் நாட்டின் தற்போதைய சட்ட நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தர அமைச்சர் சாகல ரத்நாயக்க இணங்கியதாக அனைத்து இலங்கை உந்துருளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.