போட்டியான சந்தைப் பொருளாதாரத்தை தோற்றுவிக்க சில தீர்மானங்கள் – பிரதமர்

311 0

நாட்டினுள் போட்டியான சந்தைப் பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்கான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்க வேண்டும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்ததைக்கு அமைய, புதிய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

இதேவேளை, அமைச்சரவையின் ஊடாக சந்தை தொடர்பான சட்டமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.