வரி அறவிடும் முறைமையை மிகவும் செயற்திறனுடனும் கிரமமாகவும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற உள்நாட்டு வருமானவரித் திணைக்களத்தின் 16 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளபோதும், நேரடி வரி அறவீடானது குறைவாக காணப்படுகிறது.
அரச நிறுவனங்களினூடாக கிடைக்கும் வருமானத்தில் நூற்றுக்கு 15 முதல் 20
சதவீதமளவிலேயே அரசாங்கத்துக்கு கிடைக்கின்றது.
இந்த நிலையில், ஏனையவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், புதிய வரிச் சட்டம், ஆட்சேர்ப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து சிங்கள – தமிழ் புத்தாண்டின் பின்னர் நிதி அமைச்சுடன் இணைந்து கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

