நியூசிலாந்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அதன் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சுமார் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் 600 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப் பெருக்கில் சிக்குண்ட சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நியூசிலாந்து காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

