கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற காவல்துறை காண்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமது கணவருடன், குறித்த பெண் நேற்று பூங்காவுக்கு சென்றிருந்தபோது, அவர் அணிந்திருந்த 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை குறித்த காண்ஸ்டபிள் அறுத்து சென்றுள்ளார்.
இதன்போது, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அங்கிருந்த சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற கான்ஸ்டபிளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர் கருவாத்தோட்ட காவல்நிலையத்தில் சேவையாற்றுபவர் என கண்டறியப்பட்டுள்ளது.

