அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் ஆகியன இன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக, அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை 07.00 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்று இரவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அதனை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை காலை 08.00 மணி முதல் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படவுள்ள அடையாள வேலை நிறுத்தம், திட்டமிட்டபடி நடைபெறும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

