மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும்

390 0

வடமாகாண சபை 355 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.



எனவே வட மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என்றும் தெரியாத விடயங்களை பற்றிப் பேச கூடாது என்றும் மாகாணசபை சிவஞானம் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 90ம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடமாகாண சபை நியதி சட்டங்களை நிறைவேற்றவில்லை. அவைத்தலைவர் நியதி சட்டங்களை நிறைவேற்ற தடையாக உள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் கூறிய கருத்து தொடர்பாக இன்று மாகாண சபை அமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மாகாண சபையை சில்லறை கடை போன்று குற்றம் சாட்டுவதனை நிறுத்த வேண்டும். நியதி சட்டம் உருவாக்குவது என்பது இலகுவான காரியமல்ல. பாராளுமன்றத்துக்கு ஒப்பான விடயங்களையே மாகாண சபையும் கையாள்கின்றது. ஆகவே இந்த விடயத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்றார்.