இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வௌிவிவகார அமைச்சின் செயலாளருக்கு விடயங்களை தௌிவூட்டியுள்ளார்.
இந்த தௌிவூட்டல் கடிதமொன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவுகின்றமையானது, அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் உலக நாடுகளில் பரவுகின்ற சாதாரண நோய் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் தற்போது ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் பரவுகின்றமை அதிகரித்துள்ளதாகவும், வௌிநாட்டு சுற்றுலா பயணிகளிக்கு எச்சரிக்ைக விடுக்கின்ற அளவிற்கு இந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு தௌிவூட்டியுள்ளார்.
ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தக நடவடிக்ைககளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என உலக சுகாதார ஸ்தாபனம் 2005ஆம் ஆண்டு தமது உறுப்பு நாடுகளுக்கு அறிவித்திருந்ததாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

