இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவை

335 0

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த பிரதேசங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி விஷேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பயணிகளின் வசதிக்காக மேலதிகமாக 3 ஆயிரத்து 600 பேருந்துகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.