திருகோணமலை – கிண்ணியா – மஹ்ருப் நகரில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7.30 மணியளவில் காவற்துறை அவசர அழைப்பை தொடர்பு கொண்ட நபரொருவர் முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கிண்ணியா காவற்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்து விசாரணை செய்த காவற்துறை பின் பிணையில் செல்ல அனுமதித்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணைகளின் அடிப்படையில் கருத்து தெரிவித்த பொலிஸார், இரு குடும்பங்களின் பகைமை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இச்செயலை புரிந்த நபரை விரைவில் கைதுசெய்யும் முயற்சியை தாம் துரிதப்படுத்தியுள்ளதாகம் தெரிவித்தனர்.
கிண்ணியாவில் பகைமை காரணமாக இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

