தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மகிந்த அமரவீர

253 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுப்பதற்கு தீர்மானிக்கவில்லை என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வடமாகாண கடற்தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கும், மீன்பிடித்துறை அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோரிக்கை அடிப்படையில், படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கு பதில் வழங்கும் முகமாகவே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர இதன்போது உறுதியளித்தார்.
இதற்கிடையில், இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் இடம்பெறும் 3ஆம் கட்ட பேச்சு வார்த்தைகள் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளன.
இதனடிப்படையில் இந்திய கடற்தொழில் அமைச்சர் ராதா மோஹன் சிங் தலைமையிலான குழு ஒன்று இன்று இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.