புதுப்பிக்கப்பட்ட கட்டுநாயக்க வானுர்தி ஓடு பாதைகள் நாளை திறக்கப்படும் என பொது வான் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் எச்.எம்.சீ நிமல்சிறி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் இதுவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த சகல வான் சேவைகளும் வழமை போல இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

