மட்டக்களப்பு – கரடியனாறு – கொஸ்கொல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, செங்கலடி, கோப்பாய், பண்டாரவளை, மஹியங்கனை மற்றும் மினிப்பே ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயன்படுத்திய சிற்றூர்தி ஒன்றும் புதையல் தோண்டுவதற்காக உபயோகிக்கப்பட்ட பொருட்களும் கரடியனாறு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

