நாவலப்பிட்டி – தொலஸ்பாகே பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதி விட்டு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 53 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவதாக நாவலப்பிட்டிய மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


