பனாமா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

369 0

பனாமா ராஜ்ஜியத்துக்கு சொந்தமான எம்.எஸ்.சீ. டெனியலா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்த சிறிய ரக பொருள் ஒன்றே தீப்பரவலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 10 மைல் தூரத்துக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெல் – 212 ரக உலங்கு வானுர்தி ஈடுபடுத்தப்பட்டதாக வான்படை தெரிவித்துள்ளது.

பனாமாவுக்கு சொந்தமான குறித்த கப்பல் சிங்கப்பூரில் இருந்து எகிப்து நோக்கி பயணித்த வேளையில் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளது.