மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் உடற்பயிற்சி நிலையம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி முகாம்களில் முதன்மையானதாக காணப்படும் இப்பயிற்சி முகாமில் தினமும் நூற்றுக்காணக்கான இளைஞர், யுவதிகள் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர்.
இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பொறியியலாளர் என்.சசிநந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வடகிழக்கு மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

